இஸ்லமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கீழ் தளத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்த பிரதமர் இம்ரான் கான் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.


இது குறித்து தி எக்ஸ்பிரஸ் டரிப்யூன் வெளியிட்டுள்ள செய்தியில், “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிகாரிகளுடன் திங்களன்று ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது மேல் மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஆவணங்கள் ஏதும் எரிந்து போயினவா என்பது குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் கசிவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்த விசாரணை நிறைவடைந்த பின்னரே, விபத்துக்கான காரணத்தை உறுதி செய்ய முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.