பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில்  தீ விபத்து

டில்லி:

பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில் இன்று  தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் வீடு டில்லி பிருத்விராஜ் சாலையில் இருக்கிறது. இன்று வீட்டில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் விரைந்து வந்து சில நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்கப்பட்டது. தீயணைப்புத் துறை உதவி இல்லாமலேயே  காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்துவிட்டனர். இதனால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.