இஸ்ரோவில் பயங்கர தீ விபத்து….
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய வானிலை ஆய்வு மையமான இஸ்ரோவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 தீயணைப்பு வண்டிகளில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் மற்றும் தீ விபத்து குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இஸ்ரோவில் உள்ள ஸ்டோர் ரூமில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயணைப்பு வீரர்கள் விரைந்த செயலாற்றி தீயை அணைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மற்ற சேத விவரங்கள் தெரிய வில்லை.