மும்பையில் பயங்கர தீ விபத்து! 14 பேர் பலி

மும்பை,

மும்பையில் லோயர் பரேல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமுற்றதாக கூறப்படுகிறது. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மும்பை லோயர் பரேல் பகுதியில் உள்ள  கமலா மில்ஸ் காம்பவுண்டில் உள்ள கட்டடத்தில் இருக்கும் விடுதி ஒன்றில்  நள்ளிரவு திடீரென தீ பிடித்தது. அப்போது அந்த கட்டித்தில் தூங்கிக்கொண்டிந்தவர்கள் இந்த திடீர் தீ விபத்தில் சிக்கினர்.

இந்த கோர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 11 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்1 4 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் அருகிலுள்ள  கே ஈ எம் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்து குறித்து அறிந்தது தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ யை அணைத்தனர். தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.