மும்பை குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து: 9 தீயணைப்பு வண்டிகளுடன் தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்

மும்பை:

மும்பையில் உள்ள  பாந்த்ரா பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க  9 தீயணைப்பு வண்டிகளுடன் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாந்த்ரா பகுதியில்  உள்ள லால்மதி  என்ற குடிசை பகுதியில் இன்று காலை தீடீர் என தீ விபத்து ஏற்பட்டது.  காற்று வேகமாக வீசி வருவதால், தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடடினயாக சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து காரணமாக அந்த பகுதியே  கரும்பு கை மூட்டத்தால் சூழப்பட்டு உள்ளது.  9 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணமும், தீயினால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்தும் இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.