உ.பி.யில் அன்பரா அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ

லக்னோ:

உ.பி. மாநிலம் அன்பரா அனல் மின் நிலையத்தில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஸ்விட் யார்டில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.

உ.பி. மாநிலத்தில் சன்பத்ரா பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தில் உள்ள யார்டில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  நள்ளிரவு 10.30 மணி அளவில் இந்த தீ பரவியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

You may have missed