லண்டன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

லண்டன்:

பிரிட்டன் தலைநகரான லண்டன் வடக்கு பகுதியில் உள்ள கேம்ப்டன்ஸ் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தற்போது  10 தீயணைப்பு வண்டிகளுடன் 70 வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.

இந்த  தீ விபத்தில்  உயிரிழப்போ, எவருக்கும் காயமோ  ஏற்படவில்லை என்று லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.