டில்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

 டெல்லி:

லைநகர் டில்லியில் உள்ள நங்கோலி (Nangloi) என்ற பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

டில்லியின்  நரேஷ் பார்க் பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை 3 அடிக்கு மாடிகளை கொண்டது. இந்த கட்டிடத்தினுள் இந்த புகை வந்ததை தொடர்ந்து, தீ மளமளவென பிடித்து தீ எரியத்தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  சுமார் 25 தீயணைப்பு வீரரகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இந்த தீ விபத்தில் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயிர்ச்சேதம் குறித்து எந்தவித தகவலும் இல்லை.