முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து

--

கொச்சி

இந்தியன் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் இன்று  அதிகாலை திவிபத்து ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஒரு சில சர்ச்சைகளின் காரணமாக இவர் இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார். இவர் திருமணமானவர். இவர் தனது  மனைவி மற்று குழந்தைகளுடன் கெரளமாநிலம் கொச்சியின் அருகில் உள்ள இடப்பள்ளி என்னும் இடத்தில் வசித்து வருகிறார்.

இன்று அதிகாலை இவர் வீட்டில் இருந்து ஏராளமான புகை வந்துள்ளது. இதனால் பயந்து போன அண்டை வீட்டினர் தியணைப்பு நிலையத்துக்குத் தகவல்  அளித்தனர். திருக்காக்கரை மற்றும் காந்தி நகர் பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வண்டியுடன் வந்து தீயை அணைக்க முற்பட்டனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவெனப் பரவியது. வீட்டின் கீழ் பகுதியில் தீ சூழ்ந்தது. ஸ்ரீசாந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாடியில் இருந்துள்ளார். தீ சூழ்ந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. எனவே தீயணைப்பு வீரர்கள்  கண்ணாடி ஜன்னலை உடைத்து அவர்களைக் காப்பாற்றி உள்ளனர்.