மும்பை தாஜ் ஓட்டல் அருகே திடீர் தீ விபத்து

--

மும்பை

மும்பை நகரில் அமைந்துள்ள பிரபல தாஜ் ஓட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் திடீர் என தீ பிடித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார தலைநகர் என போற்றப்படும் மும்பை நகரில் கொலாபா பகுதியில் தாஜ் ஓட்டல் என்னும் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இதன் அருகே சர்ச்சில் சேம்பர் என்னும் அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது.

இந்த கட்டிடத்தில் இன்று திடீர் என தீ பிடித்துள்ளது.

இந்த சர்ச்சில் சேம்ப ர்கட்டிடத்தில் 3 ஆம் மாடியில் இரண்டாம் லெவல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையொட்டி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்துள்ளனர்.

இக்கட்டிடத்தில் சுமார் 15க்கு மேற்பட்டவர்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தீயை அணைக்கும் பணியும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் எதுவும் வரவிலை. மும்பை மக்களிடையே இந்த விபத்து செய்தி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.