சீனா : நைட் கிளப் தீ விபத்தில் 18 பேர் மரணம்

பீஜிங்

சீனாவில் இரவு விடுதியில் நடந்த தீ விபத்தில் 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

சீன நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கடைபிடிக்கப்படுவது இல்லை என்னும் குற்றச்சாட்டுக்கள் அதிகம் உள்ளன.   அந்நாட்டில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.  கடந்த 2015ஆம் வருடம் சீன மருத்துவ மனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் மரணம் அடைந்தது உலகெங்கும் பரபரப்பை உண்டாக்கியது.    இந்த விபத்தை ஒட்டி சீன நீதிமன்றம் தீயணைப்பு துறையை சார்ந்த 21 பேருக்கு கடந்த வருடம் சிறை தண்டனை வழங்கியது.

சீனாவின் குவாங்டாங்க் மாநிலத்தில் குயிங் யுவான் என்னும் புகழ் பெற்ற நகரம் ஒன்று உள்ளது.    இங்கு இசை மற்றும் நடன நிகழ்வுகள் நடைபெறும் இரவு விடுதி ஒன்று உள்ளது.  இந்த விடுதியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.   இந்த விபத்தில் சிக்கி 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   5 பேர் படுகாயத்துடன் அபாய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை.