டில்லி : அமலாக்கத் துறைஅலுவலகத்தில் தீ விபத்து

டில்லி

டில்லியில் அமலாக்கத் துறை அலுவலகம் அமைந்துள்ள லோக் நாயக் பவன் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள லோக் நாயக் பவன் கட்டிடத்தில் ஆறாம் மாடியில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.   டில்லியில் உள்ள சுஜன் சிங் பார்க் அருகில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.   இந்த கட்டிடத்தில்  பல அரசு அலுவலகங்கள் உல்ளன.

தீ விபத்து ஏற்பட்ட ஆறாம் மாடியில் நிதித்துறை அமைச்சகத்தின் அமலாக்கத் துறை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது.   கடந்த சனிக்கிழமை மாலை அனைவரும் சென்ற பிறகு இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.   அதனால் உயிர் சேதம் ஏதும் நிகழவில்லை.

தீயணைப்பு வீரர்கள் மிகவும் போராடி இந்த தீயை அணைத்துள்ளனர்.   அதிகாரிகள் தரப்பில் ஏர்கண்டிஷனரில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அலுவலகப் பொருட்கள் பல தீக்கிரையானதாகவும் தெரிவித்திருந்தனர்.

சனி மற்றும் ஞாயிறு அன்று விடுமுறை தினம் என்பதால் நேற்று இந்த அலுவலகம் வந்த ஊழியர்கள் இந்த தீ விபத்தில் பல முக்கியமான கோப்புகளும் ஆவணங்களும் எரிந்துள்ளதாக கூறி உள்ளனர்.    அதிகாரிகள் இது குறித்து விவரம் அளிக்கவில்லை.