மும்பையில் தொடரும் தீ விபத்துக்கள் : அமர்வு நீதிமன்றத்தில் தீ

:

மும்பை

ன்று காலை மும்பையில் உள்ள அமர்வு நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பையில் தீ விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.   ஏற்கனவே நேற்று வரை 4 இடங்களில் தீ விபத்து நடந்துள்ளது.   இந்நிலையில்  இன்று அமர்வு நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   இத்துடன் சேர்த்து கடந்த 20 நாட்களில் மும்பையில் 5 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சி பேரிடர் மேலாண்மைப் பிரிவு அதிகாரி இது குறித்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.   அவர், “தெற்கு மும்பை பகுதியில் உள்ள மும்பை பல்கலைக் கழகம் அருகே அமைந்துள்ளது அமர்வு நீதிமன்றம்.  இன்று காலை சுமார் 7.15 மணிக்கு அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது  தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது.

அதை ஒட்டி தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

இதில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.   மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.   விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது ”  என தெரிவித்துள்ளார்.