சென்னை : வால் டாக்ஸ் சாலை மரக்கிடங்கில் தீ விபத்து

சென்னை

சென்னை செண்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள வால் டாக்ஸ் சாலையில் மரக்கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை  செண்டிரல் ரெயில் நிலயம் அருகே உள்ளது வால்டாக்ஸ் சாலை.   இங்கு ஆனந்த் என்பவருக்கு சொந்தமான மரக்கிடங்கு உள்ளது.   மரக்கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்துள்ளது.    தகவல் அறிந்ததும் 5 தீயணைப்புத் துறை வாகனங்களும் குடிநீர் வாரியத்தின் 5 வாகனங்களும் விரைந்துள்ளது.

கடுமையான போராட்டத்துக்குப் பின்பு தீ கட்டுக்குள் வந்தது.   தீயை அணைக்க சுமார் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பாடு பட்டனர்.   இந்த சாலையில் எப்போதும் பரபரப்புடன் போக்குவரத்து இருக்கும் என்பதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர்.   தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கப் பட்ட போதிலும்  புகை மண்டலத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளோர் அவதிப்பட்டனர்.

தீ விபத்து குறித்து யானைகவுனி காவல்நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.   தீ விபத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து சரியான தகவல் ஏதும் தெரிவிக்கப் படவில்லை.