சென்னை எழிலகத்தில் தீ விபத்து 

சென்னை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் நீர் வள அமைப்பு அலுவலகம் எரிந்து தீக்கு இரையாகி உள்ளது.

சேப்பாக்கத்தில் உழைப்பாளர் சிலை எதிரில் உள்ள எழிலகத்தில் பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில் பொதுப்பணித்துறை, போக்குவரத்துத் துறை சமூக நலத் துறை, ஜெயலலிதா கொலை வழக்கு ஆணைய விசாரணை அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளன.

இந்த எழிலகத்தில் பல அரசு அலுலகங்கள் அமைந்துள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். தமிழக அரசு தீபாவளி விடுமுறையை இன்று முதலே தொடங்கி விட்டதால் இந்த எழிலகம் மிகவும் வெறிச்சோடிப் போய் இருந்தது.

இன்று காலை சுமார் 11 மணிக்கு இந்த வளாகத்தின் பின்புறம் உள்ள நீர்வள அமைப்பு அலுவலகத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது. தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயனைப்புத் துறையினர் தீ மற்ற இடங்களுக்கு பரவும் முன் அணைத்தனர்.

தீயணைப்புத் துறையின் பணியால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்ட்டுள்ளது. தீப்பிடித்த பகுதியான நீர்வள அமைப்பு அலுவல்கம் மட்டுமே தீக்கு இரையானது. இதற்கான காரணம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.