பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து

பாட்னா,

பாட்னா மொகமா பயணிகள் ரெயிலில் அதிகாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் யாருக்கும் சேதமில்லை.

இன்று அதிகாலை யார்டில் நிறுத்தப்பட்டிருந்த பாட்னா மொகமா பயணிகள் ரெயிலின் பெட்டியில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாட்னா மொகமா பயணிகள் ரெயில் நேற்று இரவு 11 மணி அளவில் பாட்னா ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதையடுத்து, அதை யார்டில் நிறுத்தியிருந்தனர். இந்நிலையில நள்ளிரவு 1 மணி அளவில் அந்த ரெயிலின் பெட்டியில் இருந்து தீ எரிந்தது. பின்னர் தீ மளமளவென பரவி 4 பெட்டிகளில் பிடித்து எரியத்தொடங்கியது.

இதையறிந்த ரெயில்வே ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

யார்டில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில்பெட்டியில் தீ பிடித்ததால் சேதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

கார்ட்டூன் கேலரி