Random image

கொல்கத்தா வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தா

கொல்கத்தா நகரில் பக்ரீ மார்கெட்டில் ஒரு வணிக வளாகத்தில் கடும் தீ விபத்துஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தா ஒரு வியாபார நகரம் ஆகும்.  இந்த நகரில் மத்திய கொல்கத்தாவில் புர்ரா பஜார் அமைந்துள்ளது.   இங்குள்ள பக்ரி மார்க்கெட்டில் ஒரு 5 அடுக்கு மாடிகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது.    இந்த வளாகத்தில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன.

இன்று அதிகாலை திடீரென வளாகத்தில் உள்ள ஒரு மொத்த வியாபாரக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   அடிகாலை என்பதால் யாரும் கவனிக்காத நிலையில் தீ கிடுகிடுவென பரவி உள்ளது.   தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சுமார் 50 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வணிக வளாக தீவிபத்தில் உயிசேதம் குறித்து தகவல் ஏதும் இதுவரை வரவில்லை.   மூத்த காவல்துறை அதிகாரிகளும்,  காவல்துறையினரும் அப்பகுதியில் மீட்புப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.    ஒரு காவல்துறை அதிகாரி மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏறட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.