நியூயார்க் சுதந்திர தேவி சிலை பகுதியில் தீ விபத்து :  பார்வையாளர்கள் வெளியேற்றம்

நியூயார்க்

சுதந்திர தேவி சிலை அமைந்துள்ள ஹார்பர் தீவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹார்பர் தீவு என்னும் தீவுப்பகுதி உள்ளது.  இங்கு கையில் ஒரு தீபத்தை ஏந்திய படி பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.    இந்த சிலை 151 அடி உயரம் உள்ளதாகும்.   இந்த தீவின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையக் காண உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கமாகும்.

இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றது.   அதற்காக அங்கு பயன்படுத்தப்படும் 3 புரோடேன் காஸ் சிலிண்டர்களில் தீ பிடித்து வேகமாக பரவியது.   இந்த தீவிபத்தால் பதட்டம் அடைந்த பார்வையாளர்கள் அலறியபடி ஓட்டம் பிடித்தனர்.

தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை கடுமையான போராட்டத்துக்குப் பின் அணைத்தனர்.    இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.   விபத்தை ஒட்டி சுதந்திர தேவி சிலையை பார்க்க வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் உடனடியாக அந்த தீவுப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.