பட்டாசு தீ விபத்து: விருதுநகரில் ரூ.2 கோடி மூலிகைகள், ஓட்டல் எரிந்து நாசம்

விருதுநகர்:

ட்டாசு தீ விபத்து  காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் ஓட்டல் உள்பட  ரூ.2 கோடி மூலிகைகள் எரிந்து நாசமாயின. மேலும் பல இடங்களில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் பட்டாசு கொளுத்தி விமரிசையாக கொண்டாடப் பட்டு வந்த நிலை யில், ராக்கெட் பட்டாசு வெடித்து பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

(மாதிரி படம்)

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2 கோடி மதிப்பு மூலிகைகள் எரிந்து நாசமானது. சாத்தூர் பகுதியில் உள்ள மேடமலையில் செயல்பட்டு வந்த  தனியார் மூலிகை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டருந்த மூலிகை பண்டல்கள் எரிந்தன. இதன் மதிப்பு ரூ.2 கோடி  என கூறப்படுகிறது.

மேலும்,  விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் கிருஷ்ண மூர்த்தி என்பவரின் ஓட்டலும் தீ பிடித்து எரிந்தது. நேற்று ஓட்டலுக்கு விடுமுறை என்ற நிலையில் ,பட்டாசு காரணமாக ஓட்டல் பின்புறம் வைக்கப்பட்டிருந்த விறகுகள் மீது தீ பிடித்து ஓட்டல் எரிந்ததாக கூறப்படுகிறது.  இந்த தீ விபத்தால் விருதுநகரில் ஒருமணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

மேலும், விருதுநகர் வாடியான் தெருவில் வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் கடையிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் ஆணைக்குழாய் தெருவில்  பிளாஸ்டிக் குடோன் மற்றும் , சிவன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் வைக்கும் இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கார்ட்டூன் கேலரி