நியூயார்க்:

நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில், ’ட்ரம்ப் இன்டர்நேஷனல்’ என்ற ஓட்டல் உள்ளது. இது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குச் சொந்தமான ஹோட்டலாகும். 56 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலின் 47ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க  நேரப்படி நேற்று தீ விபத்து ஏற்பட்டதாகவும், சுமார் 5.30 மணிக்கு தீ அணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில், சுவாசக் கோளாறு ஏற்பட்டு ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர், தனது வியாபார பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்வதாக  ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

166 குடியிருப்புகளைக் கொண்ட இந்தக் கட்டடம் கடந்த 1966 ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இங்கு நீச்சல்குளம், சுகாதார நிலையம், ஹோட்டல் உள்ளிட்டவைகள் இருக்கின்றன.  தீ விபத்து குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.