ரஜினி, கமலுடன் நடித்த பிரபல தமிழ் நடிகை வீட்டில் தீவிபத்து..

 

பாரதிராஜா இயக்கிய ’புதிய வார்ப்புகள்’ படத்தில் கே,பாக்யராஜ் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி, பின்னர் ரஜினியுடன் முரட்டுக்காளை, கமலுடன் உல்லாச பறவைகள் போன்ற படங்களில் நடித்ததுடன் மேலும் பல படங்களில் நடித்தார்.
தற்போது மூத்த நடியாகிவிட்ட ரதி தற்போது மும்பை ஒர்லி பகுதியில் உள்ள 15 அடுக்கு மாடி குடியிருப்பில் 8வது தளத்தில் வசித்து வருகிறார். நேற்று அந்த குடியிருப்பில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 8 வது மாடி வரை மட்டுமே வீரர்களால் செல்ல முடிந்தது. ரதி வீட்டு கண்ணாடி ஜன்னலை உடைத்துச் சென்று 10வது மாடியில் சிக்கி தவித்தவர்களை வீரர்கள் மீட்டனர். நடிகை ரதி தற்போது போலந்து நாட்டில் இருப்பதாலும் அவரது மகன் தனுஜ் பண்ணை வீட்டில் இருந்ததாலும் அவர்கள் விபத்தில் சிக்காமல் தப்பினர்.


தீவிபத்து பற்றி ரதி மகன் தனுஜ் கூறும் போது,’நாங்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது. 8வது மாடியில் எங்கள் வீட்டு ஜன்னலை உடைத்துக்கொண்டு சென்று சிலரை தீ அணைப்பு வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்’ என்றார்.
நடிகை ரதி இந்தியில் 80. 90 களில் ஹீரோயினாக நடித்தார். தற்போது அம்மா வேடங்களில் நடிக்கி றார். இவர் தொழில் அதிபர் அனில் விர்வான் என்பவரை மணந்தார். தனுஜ் விர்வானி என்ற மகன் இருக்கிறார். கணவரை கடந்த சில மாதக்களுக்கு முன் ரதி விவாகரத்து செய்து பிரிந்தார்.