சென்னை பிரபல 5 நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து: 6 பேர் காயம்

--

சென்னை:

கிண்டி அருகே உள்ள ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலான ஹில்டன் ஓட்டலில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர்.

ஓட்டலின் சமையலறையை சுத்தம் செய்யும் பணியின் போது ஏற்பட்ட  திடீர் தீ விபத்தில், அங்கு பணியில் இருந்து முருகன், வெங்கடேசன் உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த  தீ அணைப்பு படைவீரர்கள்  தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் ஏற்ப்படாமல் தடுக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சென்னையில் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி ஹில்டன் ஓட்டல் தொடங்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும்  85 நாடுகளில் உள்ள 570 க்கும் அதிகமான ஓட்டல்கள் மற்றும் விடுதிகளை நிர்வகித்து வருகிறது.