சென்னை ஐ.ஐ.டி.யில் தீ! ஆவணங்கள் எரிந்து சாம்பல்!

சென்னை:

சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அலுவலக அறையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில்  ஆராய்ச்சி படிப்புக்கான ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் உள்ள  ஐ.ஐ.டி.யில் நேற்று இரவு 10 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அ திடீரென ஐ.சி.& எஸ்.ஆர் அலுவலக கட்டிடத்தின் 3வது தளத்தில் தீ பிடித்தது.  இதன் காரணமாக  அந்த கட்டிடத்தில் இருந்த ஆராய்ச்சி படிப்புக்கான ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர்  ஐந்து வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர். சில மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You may have missed