கமல் வீட்டில் தீ விபத்து! புத்தகங்கள் எரிந்து சாம்பல்!
சென்னை:
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை நீலாங்கரையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் இரவு சுமார் 12.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அறையில் இருந்த புத்தகங்கள் தீயில் கருகி சாம்பலாகின.
அவரது வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் இருந்த ஃப்ரிஜ் அதிக வெப்பமடைந்ததால் தீ விபத்து நிகழ்ந்ததாகவும், இதனால் அதன் அருகில் இருந்த புத்தகங்களில் தீ பற்றி வீடு முழுவதும் புகை சூழ்ந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைந்து வந்த ஊழியர்கள், தீயை அணைத்து உடனடியாக கமலை மீட்டனர்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ என் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. நான் பத்திரமாக இருக்கிறேன், யாருக்கும் பாதிப்பு இல்லை. தீ விபத்தில் இருந்து தப்பிக்க உதவிய எனது ஊழியர்களுக்கு நன்றி: என்று பதிவிட்டுள்ளார்.