ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் தீ: அதிகாரி பலி

விசாகப்பட்டினம்:

ந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கடற்படை அதிகாரி ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இன்று கர்நாடக மாநிலம்  கர்வார் துறைமுகத் திற்கு  வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயை  அணைக்கும் முயற்சியில் லெப்டினன்ட் கமாண்டர் டி.எஸ்.சவுகான் புகை காரணமாக மூச்சுத் திணறலுக்கு ஆளான நிலையில், சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

மற்ற அதிகாரிகள் உடடினயாக செயல்பட்டு கப்பலில் பிடித்த  தீயை அணைத்தனர். இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்திய கடற்படையில் உள்ள மிகப்பெரும் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பல் சுமார்   284 மீட்டர் நீளமும் 60 மீட்டர் உயரமும் கொண்டது. அத்துடன்  40 ஆயிரம் டன் எடை கொண்டது.