படப்பிடிப்பில் தீ: உயிர் தப்பினார் அதிதி

 

படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் நடிகை அதிதி ராவ் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம், ’காற்று வெளியிடை’.

இந்த படத்தில்  ஹீரோயினாக நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி.

இவர் தற்போதுது  ’பூமி’ என்ற இந்திப் படத்தில் நடித்துவருகிறார்.

ஓமுங் குமார் இயக்கத்தில் சஞ்சய் தத் ஹீரோவாக  நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையிலுள்ள ஆர்.கே.ஸ்டூடியோவில் திருமண பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள  பிரமாண்ட செட் டில்,  டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா நடன காட்சிகள் அமைத்தார்.

நடன கலைஞர்கள் உட்பட சுமார் 300 பேர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தனர்.

அப்போது ஏற்பட்ட  மின் கசிவு காரணமாக செட்டின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அங்குள்ளவர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

இதுபற்றி படக்குழு கூறும்போது,

’அதிர்ஷ்டவசமாக  நாங்கள் வெளியேற்றப்பட்டோம்.  தீ பெரிய அளவில் பரவும் முன்பு அணைக்கப்பட்டு விட்டது. எங்களுக்கு டெட் லைன் இருந்ததால் சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்கு பிறகு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிவிட்டோம்’ என்றனர்.