ராணுவ முகாமுக்குள் ஊடுறுவிய மர்ம நபர் மீது துப்பாக்கி சூடு

ஜம்மு:

காஷ்மீரில் நக்ரோட்டா ராணுவ முகாம் உள்ளது. அந்த முகாமின் வேலிக்குள் நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நுழைய முயற்சித்தார்.

 

காவலாளி தடுத்ததையும் மீறி அவர் எல்லை வேலியை தாண்டி, முகாமுக்குள் ஓட முயற்சித்தார். அப்போது காவலாளி அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் காயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

உடன் அதிரடிப்படை வீரர்கள் அந்த நபரை சுற்றி வளைத்தனர். அந்த நபரை ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர்.


சிகிச்சை முடிந்ததும் அந்த நபரிடம் விசாரணை நடத்த ராணுவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக முகாமுக்குள் நுழைய முயன்றார் என்பது மர்மமாக உள்ளது.