கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ: நோயாளிகள் பதற்றம்

கொல்கத்தா:

ரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.நோயாளிகள்  பதற்றம் அடைந்தனர்.

மேற்குங்காள தலைநகர்  கொல்கத்தாவில் உள்ள அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பார்மசி பிரிவில் அதிகாலை குபுகுழுவென புகை வெளியேறி யது. இதைக்கண்ட மருத்துவமனை காவலர்கள் மற்றும் ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, பார்மசி அறையினுள் தீ பிடித்து எரிந்துகொண்டிருந்தது.

இதுகுறித்து உடடினயாக காவல்துறைக்கும் தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து  10 வண்டிகளில் வந்த தீ அணைப்பு துறையினர், தீ மற்ற இடங்களுக்கு பரவாதவாறு கட்டுப்படுத்தினார். அருகில் உள்ள பகுதிக்கு தீ பரவாமலும்  தடுத்தனர்.

பார்மசியில் இருந்த மருந்து பொருட்கள் தீயில் கருகியதால், அந்த பகுதி  முழுவதும் ரசாயண வாடையுடன் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதன் காரணமாக மருத்துவமனையில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பதற்றமுடனேயே காணப்பட்டனர்.  தீவிபத்து ஏற்பட்ட  பார்மசி அருகில் எந்தவித  சிகிச்சைப் பிரிவுகள் இல்லாததால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.

நோயாளிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.