பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்: காங்கிரஸ் கேள்விக்கு சட்டமன்றத்தில் எடப்பாடி பதில்

சென்னை:

ட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்   என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார், பட்டாசுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதில் பதில் அளித்து  முதலமைச்சர் பழனிச்சாமி, உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாகவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதாடியதால் தான், பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் அனுமதி கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை, தமிழக அரசு பாதுகாக்கும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.