அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு

 

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் செயின்ட் மேரி நகரில் உள்ள கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

1500 மாணவர்கள் படிக்கிற அந்த பள்ளியில் நேற்று திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக காவல் படையினர்  சம்பவ இடத்துக்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தி நபரை வளைத்துப்பிடித்தனர்.

உடனடியாக பள்ளி  மூடப்பட்டது. மாணவர்கள் பாதுகாப்பாக  வெளியேற்றப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு பற்றிய தகவல் அறிந்ததும், அந்த பள்ளியில் படிக்கிற மாணவர்களின் பெற்றோர், அங்கு குவிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு  நிலவியது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர்ச்சேதம் உண்டா, படுகாயம் அடைந்தவர்கள் எத்தனை பேர், துப்பாக்கிச்சூட்டை நடத்தியது ஒருவரா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களா என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க பள்ளிக்கூடங்களில் இந்த வருடம் மட்டும் இதுவரையில் 17துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.