நெல்லை:

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய பொதுமக்கள்மீது போலீசார்  துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வலியுறுத்தியும  நெல்லையில் அரசு பேருந்து பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய  துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பொதுமக்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நெல்லை அருகே இடித்தக்கரை பகுதியில், போலீசார் துப்பாக்கி சூடு கண்டித்தும், அரசுக்கு எதிராகவும்   ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் அரசுப்பேருந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியை சேர்ந்த  200-க்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதுபோல சேலத்திலும் இளைஞர்கள் போலீசாரின் துப்பாக்கி சூடு கண்டித்து போராட்டம் நடத்தினர்.