மக்களுடைய விவரங்களுக்கு தொலை தொடர்பு நிறுவனங்கள் பாதுகாவலர்கள் : டிராய்

டில்லி

க்கள் அளிக்கும் விவரங்கள் மக்களின் உரிமை என்றும் அதை பெறும் நிறுவனங்கள் அந்த விவரங்களின் பாதுகாவலர் எனவும் தொலை தொடர்பு கண்காணிப்புத் துறை அறிவித்துள்ளது.

ஆதார் விவரங்களை சிம் கார்டுடன் இணைப்பது குறித்து பல வித கருத்து வேற்றுமைகள் நிலவி வருகின்றன.   இவ்வாறு இணைப்பதினால் பயனாளிகளின் சொந்த விவரங்கள் திருடப் படலாம் என பலரும் கூறி வருகின்றனர்.   ஆதார் எண்ணை சிம் கார்டு உள்ளிட்ட பலவற்றுடன் இணைப்பதை எதிர்த்து வழக்கு ஒன்று உச்சநீதிமன்ற சட்ட அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் டிராய் என அழைக்கப்படும் தொலை தொடர்பு கண்காணிப்புத் துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அதில், “ மக்கள் அனிவருக்கு அவரவர் விவரங்கள் அவர்களுடைய உரிமை ஆகும்.   அதை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு.  எனவே மக்கள் அளிக்கும் அனைத்து விவரங்களும் வெளியாகாதபடி தொலை தொடர்பு நிறுவனர்கள் செயல்பட வேண்டும்.   இந்நிறுவனங்கள் அந்த விவரங்களுக்கு பாதுகாவலர்கள் ஆவார்கள்.

நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் விவரங்களை வேறு யாரும் கையாள முடியாத படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.   ஏற்கனவே உள்ள செயல்பாடுகள் மூலம் அவ்வாறு நடக்கலாம் என சந்தேகம் இருந்தால் அந்த செயல்பாடுகளை உடனடியாக நீக்கி விட வேண்டும்.    அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பயனாளிகள் விவரங்களை உடனடியாக அரசுக்கு அறிவிக்க வேண்டும்.  விவரங்கள் ஏதும் திருடப்படாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அரசுக்கு தெரியப் படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.