யோகியின் 16மாத கால ஆட்சியில் 3ஆயிரம் என்கவுண்டர்: அதிர்ச்சி தகவல்கள்

லக்னோ:

உ.பி. மாநிலத்தில் பாஜக ஆட்சி ஏற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதை மாநில அரசின் சாதனையாக குடியரசு தின அறிவிப்பில் யோகி அரசு தெரிவித்து உள்ளது.

உ.பி. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 16 மாத கால ஆட்சியில், மாநிலத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான என்கவுண்டர்கள் நடைபெற்று உள்ளதாகவும், 78 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் மாநிலஅரசின் சாதனையாக குடியரசு தின  உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யோகி அரசு வெளியிட்டுள்ள சாதனை பட்டியலில்,  ஜூலை 2018 வரை 3,026 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன. இதில் 69 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், 7,043 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், 838 குற்றவாளிகள் காயமடைந்தனர். அதே நேரத்தில், 11,981 குற்றவாளிகள் தங்கள் ஜாமீன் ரத்து மற்றும் நீதிமன்றங்களில் சரணடைந்தனர் என்று  பட்டியலிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள விசேட அதிரடிப்படை (STF) ஒன்பது குற்றவாளிகளை சுட்டுக் கொன்று 139 பேரைக் கைது செய்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது நான்கு குற்றவாளிகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அதுபோல நாள்தோறும்,  டிசம்பர் 15, 2017 வரை அரசாங்கத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 17 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர் – சராசரி யாக மாதத்திற்கு 1.8. எனினும், இந்த எண்ணிக்கை அடுத்த ஏழு மாதங்களுக்கு அதிவேகமாக அதிகரிக்கிறது: ஜனவரி 2018 மற்றும் ஜூலை 2018 இடையே, 61 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு, 2018 குடியரசு தின நிகழ்ச்சித்திட்டத்தின்போது சிறப்பம்சமாக அனைத்து மாவட்ட நீதி மன்றங்களுக்கும் இதே போன்ற கடிதத்தை அரசாங்கம் அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கை யின் படி, 177 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்,  109 பேர் “தற்காப்புக்காக” போலீசார் எடுத்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.