பாரீஸ்: பிரான்சில் இருந்து முதல்கட்டமாக 5 ரபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன.
2016ம் ஆண்டு  இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம், பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் விமானங்களை முறைப்படி பெற்றுக்கொண்டார்.
ஆனால் மே மாதம் வரவிருந்த ரபேல் விமானங்கள்  வருகை,கொரோனா காரணமாக தள்ளி போனது. இந் நிலையில் முதல்கட்டமாக அதி நவீன 5 ரபேல் போர் விமானங்கள், இன்று பிரான்சில் இருந்து இந்தியா புறப்பட்டன.

இது குறித்து பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் கூறி இருப்பதாவது: 10 விமானங்களை வழங்குவது என்பது கால அட்டவணையின்படி நிறைவடைந்துள்ளது. 36 விமானங்களின் விநியோகமும் 2021ம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ரபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஒப்படைக்கப்படுகிறது. வரும் 29ம் தேதி அந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படுகிறது.