புதுச்சேரியில் முதல் கொரோனா பலி…

புதுச்சேரி:

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தார். இதுவே புதுச்சேரியின் முதல் கொரோனா பலி.

கொரோனா பரவல் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. நாட்டில் உள்ள  28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில்,  20 மாநிலங்களைச் சேர்ந்த பலர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அந்த வழியில், முதல் இழப்பை சந்தித்துள்ள புதுச்சேரி மாநிலம் நாட்டின்  21வது மாநிலமாக  இணைந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மாஹே பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மாநிலத்தில் மொத்தம் 5 பேர்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுதான் புதுச்சேரி மாநிலத்தில் முதல் பலி.

இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உள்ளது.  ஒருவர் குணமடைந்துள்ளார்.