மதுரையில் தமிழகத்தின் முதல் கொரோனா பலி : 54 வயது நபர் மரணம்

துரை

துரையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் மரணம் அடைந்துள்ளார்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது.   இதையொட்டி நேற்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.  இது தமிழகத்தின் முதல் கொரோனா பலி ஆகும்.   அவருக்கு ஏற்கனவே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்கடங்காமல் இருந்துள்ளது.

அவருக்கு முடிந்த அளவுக்குச் சிகிச்சை முயற்சிகளை மேற்கண்ட போதிலும் மற்ற பாதிப்பு காரணமாகச் சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைகக்வில்லை எனவும் நேற்று இரவு  அவர் மரணமடைந்ததாகவும் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி