தமிழகத்திலும் பரவிய கொரோன வைரஸ் : டில்லி மருத்துவ நிபுணர் குழு சென்னை வருகை

சென்னை

மனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு  உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சீனா நாட்டின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.   இதுவரை 91 நாடுக்ளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளனர்.    இந்த தாக்குதலால் சுமார் 3400 பேர்கள் மரணம் அடைந்துளனர்.   உலக சுகாதார மையம் சுகாதார அவசர நிலை பிறப்பித்துள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.  நேற்று மேலும் 3 பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மொத்த எண்ணிக்கை 34 ஆகி உள்ளது.  இவர்களில் இருவர் ஈரான் சென்று திரும்பிய பஞ்சாப் திரும்பியவர்கள் ஆவார்கள்.  மற்றொருவர் ஓமனில் இருந்து தமிழகம் திரும்பியவர் ஆவார்.

தமிழகத்தை சேர்ந்த கொரோனா வைரஸ் நோயாளி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதையொட்டி டில்லியில் இருந்து மருத்துவர் குழு ஒன்று சென்னைக்கு வந்துள்ளது.   இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.