வாஷிங்டன்:
மெரிக்காவில் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் குடியிருப்புகளுக்கு முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கொடுக்கப்படும் என்று உயர்அதிகாரமுள்ள அமெரிக்க அரசாங்க குழு அறிவித்துள்ளது.
ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டை உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(FDA) இன்னும் அங்கீகரிக்கவில்லை, இம்மாதம் 10-17ஆம் தேதிக்கு இடையில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப வாரங்களில் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் ஆய்வில் 90 சதவீதத்திற்கும் மேலாக கொரோனா வைரசுக்கு எதிரான செயல்திறனை காட்டியுள்ளது.
அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தவுடன் ஃபைசர் தடுப்பூசியின் முதல் ஏற்றுமதி இரண்டு வாரங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 330 மில்லியனில் 25 மில்லியனிற்க்கும் குறைவாகவே சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர், கொரோனா வைரஸ் இந்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்காவில் பரவத் துவங்கியதிலிருந்து இதுவரை 2,70,000 மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த கொடிய வைரஸ் 13 மில்லியனுக்கும் அதிகமான நபர்களை பாதித்துள்ளது.