இன்று முதல்நாள்: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை,

மிழகத்தில் இந்தாண்டுக்கான பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் தொழிற்கல்வி பயின்றுள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில்  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்  583 பொறியியல் கல்லூரிகள்   இயங்கி வருகின்றன.

இவற்றில் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அரசிடம் ஒப்படைத்துள்ள 15 ஆயிரத்து 737 இடங்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 643 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

அதற்கான கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. இன்றும் நாளையும், ப்ளஸ் 2 -வில் Vocational Group எடுத்து படித்த தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து  வரும் 19-ம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அவர்களுக்காக 6, 224 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து, 19ந்தேதி மற்றம் 20ந்தேதி விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்கப்பட்டு 21-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 23 – ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, கலந்தாய்வுக்கு வர முடியாமல் விடுபட்டு போனவர்களுக்கான கலந்தாய்வு  ஆகஸ்ட் 17-ம் தேதி நடத்தப்படும்.

இதற்காக விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய நாள் ஆகஸ்ட் 16-ம் தேதியாகும்.

அருந்ததியினருக்கான ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களில் ஆதிதிராவிட இனத்தவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18-ம் தேதியன்று நடத்தப்படும்.

இவ்வறு கூறப்பட்டுள்ளது.