முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்…!

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள மாஸ் படம் நேர்கொண்ட பார்வை.

பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகத்துடன் பட்டாசு வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் படத்திற்கு வரவேற்பு கொடுத்துள்ளனர்.

அதிகாலை 1 மணி முதல் நேர்கொண்ட பார்வை படம் சிறப்பு காட்சி பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

ரசிகர்களோடு ரசிகர்களாக இருந்து சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர். இதில், இப்படத்தில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் சென்னையிலுள்ள ரோகிணி திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார்.