விடுதலைப்புலிகளின் முதல் ஆயுத தாக்குதல் நடத்திய தினம் இன்று!

விடுதலைப்புலிகள் முதன் முதலாக ஆயுத தாக்குதல் நடத்திய நாள்: 27-7-1975

விடுதலைப் புலிகள் அமைப்பு 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கப்பட்டது._

இலங்கை  ஆண்ட அரசுகளின் தமிழர்கள் விரோதம்  தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இலங்கை தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

1975-ம் ஆண்டு ஜுலை மாதம் 27-ந்தேதி யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுவே புலிகளின் முதல் ஆயுத தாக்குதல் என்றும் கருதப்பட்டது._

யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை செய்யப்பட்டதுக்கு அல்பிரட் துரையப்பாவே காரணம் என கருதி பழிக்கு பழியாக அவர் கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து நிலவுகிறது