‘கோவிட் 19’ தாக்குதல் – ஐரோப்பிய நாடான இத்தாலியில் முதல் பலி!

ரோம்: சீனாவில் தோன்றிய ‘கோவிட் – 19’ எனப்படும் கொரோனா வைரஸ், ஐரோப்பிய நாடான இத்தாலியில் முதல் பலியை வாங்கியுள்ளது.

இத்தாலியின் வடக்கு மாகாணமான படுவா பகுதியில் இந்த வைரஸ் தாக்குதலால் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொரோனாவிற்கு இத்தாலியில் முதல் உயிரிழப்பு நடந்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இத்தாலியில் முதல் பலி நடந்துள்ளதை அடுத்து, வடக்கு மாகாணத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 23,00 ஐ தாண்டியுள்ள நிலையில், உலகெங்கிலும் 28க்கும் மேற்பட்ட நாடுகளில் அந்த வைரஸ் பரவியுள்ளது.

சீனாவின் அண்டை நாடான தென்கொரியா, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் அந்த வைரஸ் பரவி வருகிறது. மேலும், இந்த வைரஸ் தாக்குதலால், சீனாவின் அண்டை நாடான ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றுவது குறித்தும் உத்தேசிக்கப்பட்டு வருகிறது.