திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது.

காசர்கோடு மாவட்டத்தில், டாடா குழுமம் சார்பில் கட்டப்பட்ட கொரோனா பிரத்யேக மருத்துவமனையை முதலமைச்சர் பினராயி விஜயன், வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

அரசு, தனியார் 2ம் மக்கள்  நலனுக்காக இணைந்து உருவாக்கிய இந்த திட்டத்திற்காக டாடா நிறுவனத்திற்கு நன்றி கூறினார்.

தெக்கில் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலப்பரப்பில் 80 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இம்மருத்துவமனை ரூ.60 கோடி செலவில் 5 மாதங்களிலேயே கட்டி முடிக்கப்பட்டது.

மொத்தம் 551 படுக்கைகள் மற்றும் 36 வென்டிலேட்டர்கள் கொண்ட மருத்துவமனை டாடா நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, 1400 படுக்கைகள் கொண்ட கொரோனா முதல்வரிசை சிகிச்சை மையம் திருச்சூர் மாவட்டம் நட்டிகாவில் திறக்கப்பட்டுள்ளது.