லண்டன்:

188 ஆண்டு வரலாற்றில் முதன் முதலாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் கமிஷனராக ஒரு பெண் அதிகாரி நியமனம் செய்யப்பட் டுள்ளார்.

43 ஆயிரம் போலீஸ் மற்றும் ஊழியர்களை கொண்ட லண்டன் பெருநகர போலீஸ் கமிஷனராக க்ரெசிடியா டிக் நியனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 188 ஆண்டு கால வரலாற்றில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தலைமை பொறுப்புக்கு ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

56 வயதாகும் டிக்கை உள்துறை செயலாளர் அம்பெர் ரூட் நியமித்து உத்தரவிட்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்ததற்காக ஸ்காட்லாந்து போலீஸ் அதிகாரிகளின் பாராட்டை பெற்றவர் டிக்.

எனினும் 2005ம் ஆண்டு லண்டனில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பிரேசிலை சேர்ந்த ஜீன் சார்லஸ் டி மெனிசிஸ் என்பவர் தற்கொலை படையை சேர்ந்தவர் என தவறாக அடையாளம் காணப்பட்டு போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட சவம்பத்தில் டிக் க டுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.