பொது முடக்கத்துக்குப் பின் முதல் படமாக மீண்டும் வெளியாகிறது பிஎம் நரேந்திர மோடி….!

கொரோனா ஊரடங்கிற்கு பின் சுமார் ஏழு மாதத்திற்கு மேல் வரும் 15-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வரலாற்றுப் படமான ‘பிஎம் நரேந்திர மோடி’ படம் தியேட்டர்களில் மீண்டும் வெளியாக உள்ளது. இந்தப் படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட உள்ள இன்றைய நிலையில், இதுபோன்ற மிகவும் எழுச்சியூட்டும் தலைவரின் கதையைப் பார்ப்பதை விட சிறந்தது என்ன இருக்க முடியும் என படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறியுள்ளார் .