கேலோ இந்தியா தொடரில் முதல் தங்கம் வென்ற திரிபுரா வீராங்கனை..!

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் துவங்கியுள்ள கேலோ இந்தியா என்ற பெயரிலான தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கத்தை தட்டியிருப்பவர் திரிபுரா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கணை பிரியங்கா.

இந்தியாவின் விளையாட்டுத் திறமையாளர்களைக் கண்டறியும் வகையில் ‘கேலோ இந்தியா யூத் கேம்ஸ்’ என்ற பெயரில் விளையாட்டுத் திருவிழா நடத்தப்படுகிறது. அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் தற்போது 3வது சீசன் நடைபெற்று வருகிறது.

இதில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஜிம்னாஸ்டிக் ஆல் ரவுண்ட் பிரிவில் கலந்துகொண்ட திரிபுராவின் பிரியங்கா தாஸ்குப்தா 42.06 புள்ளிகள் பெற்று, இந்த விளையாட்டுத் தொடரின் முதல் தங்கத்தை வென்ற வீராங்கணை என்ற பெயரைப் பெற்றார்.

ஆண்கள் பிரிவில் முதல் தங்கத்தை வென்றவர் என்ற பெருமை உத்திரப்பிரதேசத்தின் ஜடின் குமாருக்கு கிடைத்தது.

பெண்களுக்கான ‘ரிதமிக்’ பிரிவில் மராட்டியத்தின் அன்குஷிற்கு தங்கமும், ஸ்ரேயாவுக்கு வெள்ளியும் கிடைத்தது.