கொரோனா: COVID-19 தடுப்பு மருந்தின் முதல் சோதனைகள் ஆப்பிரிக்காவில் தொடங்கின

ஜூன் 24, 2020 புதன்கிழமை, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சோவெட்டோவில் உள்ள கிறிஸ் ஹனி பரக்வநாத் மருத்துவமனையில் தன்னார்வலர் ஒருவர் கொரோனா தடுப்பு மருந்தைப் பெறுகிறார். ஆம், பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தின் முதல் மனிதப் பரிசோதனைகள் தன்னார்வ பங்கேற்பாளர்களுடன் தென்ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டது.

முதல் COVID-19 தடுப்பு மருந்து சோதனைகள் ஆப்பிரிக்காவில் கடந்த மாத இறுதியில் தொடங்கியது. கொரோனா தொற்று பதட்டத்தில் இருந்த பல ஆயிரகணக்கான தன்னார்வலர்கள் தடுப்பு ஊசியைப் பெற்றுள்ளனர். சுமார் 1.3 பில்லியன் பாதிக்கப்பட்டுள்ள இக்கண்டத்தினை அப்படியே விட்டுவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தின் பெரிய அளவிலான மனித சோதனை தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரேசிலில் நடத்தப்படுகிறது. ஆப்பிரிக்காவின் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு (சுமார் 106,000 பேர்)  தென்னாப்பிரிக்காவில்  உள்ளனர். இதில் 2,100 க்கும் மேற்பட்ட இறப்புகளும் அடக்கம். ஜூன் மாத இறுதியில், ஒரே நாளில் அதிகபட்சமாக 111 பேர்களில் இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் ஆர்வலராக பங்கேற்றது குறித்து கொஞ்சம் பயப்படுகிறேன், ஆனால் இந்த தடுப்பு மருந்தின் செயல்பாட்டை அறிய விரும்புகிறேன். என்ன நடக்கபோகிறது என்று தெரியவில்லை. அதனால் எனது நண்பர்கள் மற்றும் பிறருக்கு ஆய்வில் என்ன நடக்கிறது என்பதை நான் சொல்ல முடியும்” என்று தடுப்பூசி சோதனை சோதனையில் பங்கேற்ற தன்னார்வலரான ஜூனியர் மஹ்லோங்கோ ஜோகன்னஸ்பர்க்கில் கூறினார். ஆப்பிரிக்க கண்டத்தில் இப்போது கிட்டத்தட்ட 325,000 நோயாளிகள் உள்ளனர்.  ஏனெனில், ஒவ்வொரு நாடும் தனது குடிமக்களின் பொருளாதாரம் சார்ந்த தேவைகளில் அழுத்தம் காரணமாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளன. ஆப்பிரிக்கா உலகின் அடுத்த பெருந்தொற்றின் பாதிப்பு நிறைந்த இடமாக  மாறக்கூடும் என்பதால் சோதனைப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.

கொரோனா பெருந்தொற்று ஆப்பிரிக்காவில் மிகவும் தாமதமாகவே தொடங்கியது. ஆனால் மிக விரைவாக அதிகரிக்கிறது” என்று ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத் தலைவர் ஜான் கென்காசோங் கடந்த புதன்கிழமை பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும்  இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. “நாங்கள் இப்போது செயல்படாவிட்டால், ஆப்பிரிக்கா உலகளாவிய தடுப்பு மருந்தைப் பெறும் வாய்ப்பைத் தவற விடும் அபாயம் உள்ளது,” என்று அவர் எச்சரித்தார். மேலும் தடுப்பு மருந்துகளின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விஞ்ஞான நிபுணத்துத்தில் ஆப்பிரிக்கா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேமரூன், உகாண்டா, தான்சானியா, கென்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் மருத்துவ சோதனை திறன்களை மிகவும் மேம்படுத்தியுள்ளன என்று கோவிட் -19 க்கான தென்னாப்பிரிக்காவின் மந்திரி சபை ஆலோசனைக் குழுவின் தலைவர் சலீம் அப்தூல் கரீம் தெரிவித்தார். பல துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளிலும் மருத்துவ சோதனை திறன் உள்ளது என்று இங்கிலாந்து பொது சுகாதார விரைவான ஆதரவு குழுவின் இயக்குனர் டேனியல் பாஷ் தெரிவித்தார்.

ஒரு தடுப்பு மருந்து கண்டறியும் உலகளாவிய போட்டியினைப் பற்றி கூறும்போது, “எங்களுக்குத் தேவை உள்ளது என்பது மட்டுமல்ல, இப்போட்டியில் பங்கேற்கும் திறனும் உள்ளது” என்று தென்னாப்பிரிக்காவின் சுகாதார மந்திரி ஸ்வேலிம் கைஸ் கூறினார். இந்த தொற்றுநோய்க்கான மருத்துவப் பொருட்களுக்கான கடுமையான உலகளாவிய போட்டியில் ஆப்பிரிக்க கண்டம் ஒதுக்கப்படுவதையும், உலக சுகாதார அமைப்பின் ஆபிரிக்காவின் தலைவரான மாட்சிடிசோ மொயெட்டி, “முக்கிய பொருட்களுக்கான உலகளாவிய சந்தை சிதைக்கப்படுவதையும் பற்றி ஆப்பிரிக்கத் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசி வருகிறார்கள்.

WHO இன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கூறும்போது, எந்தவொரு COVID-19 தடுப்பு மருந்தும் தற்போதுள்ள சூழ்நிலையில் “பணம் செலுத்தும் திறனை” அடிப்படையைக் காட்டிலும், அது மிகவும் தேவைப்படும் இடத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த வார நிலவரப்படி, ஆப்பிரிக்காவின் 54 நாடுகளும் இப்போது கொரோனா வைரஸை சோதிக்கும் ஆய்வக திறனைக் கொண்டுள்ளன என்றும் டெட்ரோஸ் அறிவித்தார். இருண்ட கண்டத்திலும் விடியட்டும்!!

English: Halligan Agade

தமிழில்: லயா

கார்ட்டூன் கேலரி