மாஸ்கோ

லகில் முதலில் விண்வெளியில் நடந்த மனிதனான அலெக்ஸெய் இலியனோவ் மரணம் அடைந்தார்.

 

 

தற்போது பல நாடுகள் விண்வெளி ஆய்வினை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன.   இவற்றுக்கு எல்லாம் மூலமாக இருந்தது சோவியத் யூனியன் என அழைக்கப்பட்ட முந்தைய பிரிக்கப்படாத ரஷ்யா ஆகும்.   அந்த நாட்டை ஒட்டி அமெரிக்காவும் பல் விண்வெளி ஆய்வுகளை நடத்தி உள்ளது.   ஒரு காலத்தில் விண்வெளி ஆய்வில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

 

இதில் முதன் முதலில் விண்வெளியில் நடந்த வீரர் என்னும் பெருமையை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அலெக்ஸெய் இலியனோவ் பெற்றார்.  கடந்த 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று இவர் வோஸ்கோட் 3 என்னும் விண்கலத்தில் சென்று அங்கிருந்து வெளியே வந்து விண்வெளியில் 12 நிமிடங்கள் 9 வினாடிகள் நடந்து உலக சாதனை புரிந்தார்.

 

தற்போது 85 வயதாகும் அலெக்ஸெய் கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி மாஸ்கோ நகரில் உள்ள பர்டெங்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.  அவருக்கு அனைத்து உலக நாடுகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றன.   பத்திரிகை.காம் சார்பில் நாமும் நமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.