டெல்லி:

மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதன்முறையாக இந்தியா வருகிறார். அவர் பிப்ரவரி 24ந்தேதி இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக பிப்ரவரி 24ந்தேதி இந்தியா வர இருப்பதாகவும், 26ந்தேதி வரை அவர் இந்திய சுற்றுப்பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக இந்த சந்திப்பின்போது, வர்த்தகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், கடந்தஆண்டு எஃகு இறக்குமதிக்கு 25% மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 10% உலகளாவிய கூடுதல் கட்டணங்கள் விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக 28 தயாரிப்புகளுக்கு இந்திய அதிக கட்டணங்களை விதித்தது. இது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது,  விவாதிக்கப்படும் என்றும், காஷ்மீர் உள்பட  இந்திய உள்விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படாது என்று அமெரிக்க  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப்பின் இந்தியப் பயணம் தொடர்பாக ஏற்கெனவே இரு நாட்டு அதிகாரிகள் பல கட்ட ஆலோசனை  நடத்தி இருப்பதாகவும், டிரம்ப் தங்குவதற்காக டெல்லி ஐடிசி மவுரியா ஹோட்டல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இப்போதே அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.