[embedyt] https://www.youtube.com/watch?v=YpkJO_GrCo0[/embedyt]

2018-ல் அம்பர்தீ சிங் இயக்கி, நடித்து வெளியான பஞ்சாபி படம் ‘லாவுங் லாச்சி’.

இந்தப் படத்தில் அம்பர்தீ சிங்குடன் ஆமி விர்க், நீரு பாஜ்வா, அம்ரிட் மான், நிர்மல் ரிஷி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு குர்மீத் சிங் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் டைட்டில் சாங் ‘லாவு லாச்சி’ என்ற தலைப்பிலேயே யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. இணையத்தில் வெளியிடப்பட்டதிலிருந்தே பெரும் வைரலாகத் தொடங்கியது.

தற்போது இந்தியாவிலிருந்து யூடியூப் சேனலில் 1 பில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல் என்ற மிகப்பெரிய சாதனையை இந்தப் பாடல் படைத்துள்ளது. இதற்குப் படக்குழுவினரும், இசை உரிமையைக் கைப்பற்றிய டி-சீரிஸ் நிறுவனமும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.